Sunday, September 2, 2018

தானமும் தவமும்  :- 



📿   தானம் என்றால் புண்ணியம்.
📿   தவம் என்றால் அருள்பலம்.

தானம் என்றால் அன்னதானமே!

முற்றுப்பெற்ற ஞானிகள் நாமத்தை சொல்வதே தவமாகும்.

ஓம் அகத்தீசாய நம

ஓம் நந்தீசாய நம

ஓம் திருமூலதேவாய நம

ஓம் கருவூர்தேவாய நம

ஓம் பதஞ்சலிதேவாய நம

ஓம் இராமலிங்கதேவாய நம

ஓம் அருணகிரிநாதர் தேவாய நம

ஓம் மாணிக்கவாசகர் தேவாய நம

ஓம் திருஞானசம்பந்தர் தேவாய நம

ஓம் திருநாவுக்கரசர் தேவாய நம

ஓம் சுந்தரமூர்த்தி தேவாய நம

புண்ணியமும் அருள் பலமும் உள்ள மக்கள்தான் ஞானியாக முடியும். வெறும் புண்ணியம் மட்டும் இருந்தால், நல்ல பிறவிதான் அமையும். பூஜை மட்டும் செய்து அருள் பெற்றிருந்தால், ஞானத்தை தாமதமாக பெறலாம். புண்ணியமும் பூஜையும் சேர்ந்தால், அந்த ஜென்மத்திலேயே ஞானம் கைகூடும், சித்தி பெறலாம். இல்லையென்றால் அடுத்தடுத்த ஜென்மமாக தள்ளிப் போகும். பூஜை செய்தால் அருள் கிடைக்காதா? என்ற கேள்வி இருக்கும். சிறிது தாமதமாக அருள் கிடைக்கும். புண்ணியம் என்பது வலது கை, பக்தி என்பது இடது கை. இதை மகான் ஔவையார் தனது ஒளவைக்குறளில்,

தானமும் தவமும் தான்செய் வாராகில்
வானவர் நாடு வழிதிறந்திடுமே.

என்கிறார். தானத்தைத்தான் மகான் ஔவையார் முதலில் சொல்லி, பின் தவத்தை சொல்கிறார்.

பூஜை எல்லோரும் செய்வார்கள். ஆனால் எல்லோரும் கொடுக்க மாட்டார்கள். எல்லோருக்கும் கொடுக்கக் கூடிய தயைசிந்தை வராது. பிறருக்கு உதவி செய்ய வேண்டும், தருமம் செய்ய வேண்டும் என்ற உணர்வு இருந்தால் வெகுவிரைவில் சித்தி பெறலாம். ஆக தானத்தைதான் முதலில் செய்ய வேண்டும். மாதம் இருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்ய செய்ய செல்வம் பெருகும், நோயில்லாத வாழ்வு அமையும், குடும்பத்தில் அமைதி உண்டாகும், பக்தியும் கைகூடும். புண்ணியம் செய்திருந்தால், பூஜை செய்ய மனம் லயப்படும். புண்ணியம் இல்லையென்றால் பூஜை செய்ய மனம் லயப்படாது.

எனவே தானமும் தவமும் செய்ய வேண்டும். இவை இரண்டும் இருந்தால் விரைவாக ஞானத்துறையிலும் இல்லறத்திலும் முன்னேறலாம்.

No comments:

Post a Comment

சதுரகிரி வரலாறு